இந்தியாவின் முதல் 24மணி நேரம் செய்தி சேனலாக பிரனாய் – ராதிகா ராய் தம்பதியால் தொடங்கப்பட்டது என்டி டிவி . தொடக்கத்தில் தூர் தர்ஷனுக்கு ஒப்பந்த அடிபபடையிலான சேவையை இந்நிறுவனம் வழங்கி வந்தது. தவிர்க்க முடியாத செய்தி சேனாலாக வளம் வரும் இந்நிறுவனத்தின் 29விழுக்காடு பங்குகளை அதானி குழுமம் அண்மையில் மறைமுகமாக வாங்கியது சர்ச்சை ஆனது. இந்நிலையில் மேலும் 26விழுக்காடு பங்குகளை வாங்க அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் ndtv யின் 34வது ஆண்டு பொதுக்கூட்டம் வரும் 20 ம் தேதி தொடங்குவதாக இருந்தது . இந்த நிலையில் ஆண்டு பொதுக்கூட்ட தேதி செப்டம்பர் 27 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் காணொளி வாயிலாக இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு சங்க விதிகளின் படி நடக்க உள்ளது.
தொடக்கத்தில் ஒரு சேனலாக இருந்த இந்நிறுவனம் தற்போது 3சேனல்களை நடத்தி வருகிறது. 2009-10 ம் ஆண்டுகளில் ndtv யின் புரோமோட்டர் நிறுவனமான Rrpr நிறுவனம். Vcpl என்ற நிறுவனத்திடம் 403கோடியே 85லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தது. கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலில்தான் தற்போது NDTV பங்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.
முதலில் vcpl நிறுவனத்தை அதானி குழுமம் விலைக்கு வாங்கியது. பின் வாரா கடன் தொடர்பான 29விழுக்காடு பங்குகளை வாங்கிக்கொண்டது. இது தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என rrpr நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் rrpr நிறுவன கருத்து தங்களுக்கு தேவையில்லை என்றும், பகுச்சந்தை ஒழுங்கு முறை அமைப்பான sebi விதிகளுக்கு உட்பட்டு vcpl நிறுவனத்தை அதானி குழுமம் வாங்கியுள்ளது என்றும் அதானி குழுமம் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது