மத்தியில் ஆளும் பாஜகவின் 2-வது ஆட்சியின் கடைசி முழு நீள பட்ஜெட் வரும் 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.இதில் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் இவைதான்…
- மூலதன வருவாய் வரி
அசையும் மற்றும் அசையா சொத்துகளை விற்பதன்மூலம் அரசுக்கு செலுத்தப்படும் வரியே மூலதன வருவாய் வரி. முதலீடுகள் பரஸ்பர நிதி, உள்ளிட்ட அம்சங்கள் வரும் பட்ஜெட்டில் முக்கிய இடம்பிடிக்க உள்ளன.
- தனிநபர் வருமான வரி
மாதச்ச சம்பளம் வாங்கும் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் இதைநோக்கியே உள்ளது. பழைய மற்றும் புதிய வருமான வரிக்கு மாற்றாக ஏதேனும் சலுகைகள் வருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது
- மூலதன செலவீனம்
சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளுக்கு அதிக தொகை வரும் பட்ஜெட்டில் ஒதுக்க அதிக வாய்ப்புள்ளது ஏனெனில் குறிப்பிட்ட இந்த துறையில்தான் நேரடி மற்றும் மறைமுகமாக 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன
- வருவாய் பற்றாக்குறை
கொரோனா சூழலில் நாட்டின் வருவாய் பற்றாக்குறை அதிகரித்து உள்நாட்டு உற்பத்தியில் 6.5%ஆக இருந்தது,இதனை வரும் பட்ஜெட்டில் 6.4 ஆகவும், 2025-26 நிதியாண்டில் 4.5%ஆக குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது
5.உணவு மானிய சட்டமுன்வடிவு
உணவு மானிய சட்ட முன்வடிவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது, உணவுப்பாதுகாப்புச்சட்டத்துக்கு 1லட்சத்து 10 ஆயிரம் கோடி ஏற்கனவே ஒதுக்கப்படும் சூழலில் வரும் பட்ஜெட்டில் இது இரட்டிப்பாக அதிக வாய்ப்புள்ளது
6.உர மானியம்
அரசுக்கு செலவு பிடிக்கும் துறைகளில் உர மானியமும் முக்கிய இடம்பிடித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் உர மானியம் 1.38 லட்சம் கோடியாக உள்ள நிலையில் உலகளவில் உர விலை உயர்ந்துள்ளது இதனால் வரும் பட்ஜெட்டில் கூடுதலாக உர மானியம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி
நாமினல் ஜிடிபி எனப்படும் உண்மையான உள்நாட்டு உற்பத்தி வரும் நிதியாண்டில் 15 % வரை இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் சூழலில், செலவினங்கள் மற்றும் விலைவாசி உயர்வால் அது கடந்த நிதியாண்டில்7% வரை இருந்திருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- பிரிவு 80சி
வருமான வரியில் கடந்த 2014-15-ல் 80சி பிரிவில் வரி விலக்கு 50 ஆயிரத்தில் இருந்து ஒன்றரை லட்சமாக உயர்த்தப்பட்டது.இது வரும் நிதியாண்டில் 2 லட்சமாக உயர்த்தப்பட அதிக வாய்ப்புள்ளது
- சொத்துகளை பணமாக்கல்
அரசுக்கு சொந்தமான சொத்துகளை விற்று பணமாக மாற்றுவது குறித்து அதிக எதிர்பார்ப்பு உள்ளது.தற்போது வரை நடப்பு நிதியாண்டில் 33ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே பணமாக திரும்பக் கிடைத்துள்ளது
- சிறுதானியங்கள்
2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படும் சூழலில் வரும் பட்ஜெட்டில் அதிக தொகை இந்த துறைக்கு அளிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதனை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றவும் பட்ஜெட்டில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.