கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டில் இருந்து 12 ஆயிரம் பேர் இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் ஆல்பபெட் நிறுவனத்துக்கு நிதி முதலீடு தரும் கிறிஸ்டோபர் ஹோன், சுந்தர்பிச்சைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் 12 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ததுதான் மிகச்சரியான முடிவு என்றும் ஆனால் இந்த பணிநீக்கம் என்பது போதாது என்றும்,இன்னும் அதிக பணியாளர்களை நீக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ஆல்ஃபபெட் நிறுவனம் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது. இதனை பாதியாக குறைக்க முதலீட்டாளர்கள் தரப்பில் இருந்து அழுத்தம் தரப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் ஆல்ஃபபெட் நிறுவனத்துக்கும்,மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வரும் சூழலில், மைக்ரோசாஃப்ட்டில் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது கூகுளிலும் பணிநீக்கம் தொடர வேண்டும் என்ற முதலீட்டாளர்களின் அறிவுறுத்தல் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.
12,000 போதாது இன்னும் கொறையுங்க…
Date: