திருச்சி, திருப்பதி உள்பட 13 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய வானூர்தி ஆணையத்தின் தலைவர் சஞ்சீவ் குமார் கூறுகையில், மார்ச் மாத இறுதிக்குள் 13 விமான நிலையங்களை பொதுத்துறை – தனியார் கூட்டு அடிப்படையில் ஏலம் விடுவதற்கு வானூர்தி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கான பயணிகளின் வருகை அடிப்படையில் இந்த ஏலம் இருக்கும். ஏற்கனவே கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜீவர் விமான நிலையத்தில் இந்த சோதனை முயற்சியாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. எனவே அந்த முறையில் ஏலம் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். இந்த ஏலத்தில் வாரணாசியில் உள்ள குஷி நகர் , கயா, புவனேஸ்வர், அவுரங்காபாத், திருப்பதி, திருச்சி உள்ளிட்ட 6 பெரிய விமான நிலையங்களும், 7 சிறிய விமான நிலையங்களும் பங்கேற்க உள்ளன.