இலங்கையில் பெட்ரோல் விற்பனை செய்வது பற்றி அந்நாட்டு ஆற்றல்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 24 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது. கடந்த மாதத்தில் விருப்பம் உள்ள நிறுவனக் கட்டமைப்பு குறித்து தெரிவிக்க இலங்கை ஆற்றல் துறை கூறி இருந்தது.
இந்த சூழலில் அதனை பரிசீலிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு 6 வாரங்களில் இறுதி முடிவு எடுக்க உள்ளது. . இதில் இந்தியன் ஆயில் நிறுவனம் இலங்கையில் 50 எரிபொருள் நிலையங்களை திறக்க கடந்த மாதம் பணிகளை மேற்கொண்டது. நாடே பொருளாதார சிக்கலில் சிக்கி இருந்த போதும் பெட்ரோல் அளித்தது இலங்கையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் மட்டுமே. சர்வதேச நாணய நிதியம் அண்மையில், இலங்கைக்கு வந்து நிதி உதவி அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது . இலங்கைக்கு 51 பில்லியன் டாலர் கடன் உள்ளது. இதில் 2027க்குள் மட்டும் 28 பில்லியன் கடனை செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.