அகில இந்திய வணிகர்கள் அமைப்பான CAIT அண்மையில் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதன்படி நவம்பர் 4 முதல் டிசம்பர் 14ம் தேதிக்குள் 40 நாட்களில் இந்தியாவில் திருமணம் மற்றும் அது சார்ந்த வணிகம் மட்டும் 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் மொத்தம் 32 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது. இந்த அமைப்பின் ஆராய்ச்சி பிரிவு, இந்தியா முழுக்க உள்ள 4 ஆயிரத்து 302 வணிகர்களிடம் கருத்துகளை கேட்டது. டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட 35 முக்கிய நகரங்களில் திருமணம் சார்ந்த தரவுகள் சேகரிக்கப்பட்டன. அதில் திருமணத்தை மையப்படுத்தி இத்தனை பெரிய வணிகம் நடைபெறுவது தெரியவந்துள்ளது. டெல்லியில் மட்டும் குறிப்பிட்ட காலகட்டத்தில் மூன்றரை லட்சம் திருமணங்கள் இந்த காலகட்டத்தில் நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது. திருமணத்துக்காக மட்டும் டெல்லியில் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வணிகம் நடைபெற இருப்பதாக வணிகர் அமைப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் 25 லட்சம் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. கடந்தாண்டு மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்த காலகட்டத்தில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. டிசம்பர் 14ம் தேதிக்கு பிறகு கல்யாண சீசன் ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை உள்ளதாகவும் வணிகர்கள் பிரிவு தெரிவிக்கிறது.
கல்யாண செலவு மட்டும் 3.75 லட்சம் கோடியா?
Date: