முழுமையாக முடிந்து விட்டதாக கைகழுவி விடப்பட்ட ஏர் இந்தியாவினை தனது கைகளில் ஏந்திய டாடா குழுமம், 3 ஆயிரத்து 800 பேரை புதிதாக பணியில் சேர்த்துக்கொண்டுள்ளதுடன் 29 வகை திட்டங்களையும் கடந்த 6 மாதங்களில் நிறைவேற்றியுள்ளது. நாட்டுக்கு ஐந்தாண்டு திட்டங்கள் புதிய புரட்சியை செய்ததைப் போல ஏர் இந்தியா நிறுவனத்திலும் ஐந்தாண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்தாண்டு ஜனவரியில் ஏர் இந்தியாவை தனதாக்கிய டாடா குழுமம், 200 மில்லியன் டாலர் தொகையை தகவல் தொழில்நுட்பத்துக்கும் , முழுமையாக விமான நிறுவனத்தையே மாற்ற 400 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. புதிதாக 470 விமானங்களுக்கும் டாடா குழுமம் ஆர்டர்களை அளித்துள்ளது. வருங்காலத்துக்கு தேவையான அடித்தளம் அமைக்கும் டாக்சி திட்டத்தையும், இரண்டாம் கட்டமாக டேக் ஆஃப் திட்டத்தையும் டாடா குழுமம் செய்து வருகிறது. இரண்டு கட்டங்களாக பணிகளை செய்ததன் மூலம் விரைவில் அதற்கான பலன்கள் கிடைக்கும் வகையில் இருப்பதாக ஏர் இந்தியா நிறுவன சிஇஓ கேம்ப் பெல் வில்சன் தெரிவித்துள்ளார். ஏர் ஏசியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களை இணைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்,.இதேபோல் விஸ்தாராவையும் ஏர் இந்தியாவையும் இணைத்து, விமானங்களில் உள்ள இருக்கைகளை மாற்றும் பணிகளும் நடைபெறுகின்றன. புதுப்புது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், விமான வட்டாரத்தில் அதிகபட்ச வாடிக்கையாளர்கள்,அதிகபட்ச சரக்கு விமானம் மற்றும் அதிகபடச் வருவாய் ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆறு மாதங்களில் 3,800 பேருக்கு வேலை !!!!
Date: