இந்திய பங்குச்சந்தைகளில் திமிங்கலங்கள் போல வலம் வர நினைத்த , இந்திய நிறுவனங்கள் இரையாக மாறிய அதிசயங்கள் அவ்வப்போது நடப்பது உண்டு இந்த வரிசையில் கடந்த 16 மாதங்களில் மிகவும் சறுக்கிய 5 இந்திய IPOகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். 5 நிறுவனங்களால் மட்டுமே சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் வீணாக போனது தெரியுமா?.. பேடிஎம் நிறுவனம் இந்த பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது. அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலையை மதிப்பிடாமல் மிக அதிக விலைக்கு நிர்ணயித்தது மிகப்பெரிய பாதகமாக மாறிப்போனது. இதற்கு அடுத்த இடத்தில் ஜொமாட்டோ,டெல்லிவெரி,நைகா, பாலிசி பசார் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பொருளாதாரம் மீண்டு எழ செய்யப்பட்ட நடவடிக்கைகள் பாதகத்தில் முடிவடைந்திருக்கிறது. எந்த ஒரு அடிப்படை விதிகளையும் கட்டமைக்காத இந்த நிறுவனங்கள் கேஷ் பர்ன் எனப்படும் பணம் காணாமல் போகும் பிரச்னையை சந்தித்தன
பேடிஎம் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் மட்டும் தேசிய பங்குச்சந்தையில் 4%குறைந்து, மொத்தமாக 10 %சரிவை சந்தித்தது. லாப நோக்கத்துக்காக மட்டுமே துவஙக்ப்படும் பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்வோர்கவணமாக இருக்க முதலீட்டு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பெரிய அளவில் சறுக்கிய 5 IPOகள்…
Date: