உலகளவில் விமானங்களை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்ற நிறுவனமாக திகழும் போயிங்கின் தலைமை செயல் அதிகாரியாக டேவ்கல்ஹான் உள்ளார். இந்த நிறுவனம் 777x ரக விமானங்களை இந்தாண்டு இறுதிக்குள் கொண்டுவர திட்டமிட்டு இருந்தது. ஆனால் அது தாமதம் ஆகும் என்றும் கூறப்படுகிறது..இதனால் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டேவ் கல்ஹானுக்கு கிடைக்க இருந்த 7 மில்லியன் டாலர் போனஸ் கிடைக்காமல் போயுள்ளது. அந்த நிறுவனத்தின் பழைய சிஇஓவுக்கு பதிலாக டேவ் கடந்த 2020ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவருக்கு இதுவரை 2 பெரிய போனஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் அவர் 777x ரக விமானங்களை இந்தாண்டே களத்தில் இறக்க முயற்சித்தார் ஆனால் அந்த வகை விமானங்கள் 2025ம் ஆண்டுதான் தயாராகும் நிலை உள்ளது. 2025ம் ஆண்டுவரை போயிங் நிறுவனத்தில் அவர் பணியாற்ற இருக்கிறார்.
நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க சவ்ஹான் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அவர் 2 பெரிய போனஸ்களை பெற்றாலும் 3வது பெரிய போனஸ் கிடைக்காமல் போனதால் அவருக்கு கிடைக்க வேண்டிய பெரிய தொகை கிடைக்காமல் போயுள்ளது. நிறுவனத்தின் நிதி நிலையை கருத்தில் கொண்டு மேலும் சில முடிவுகளை அந்த நிறுவனம் டேவின் சலுகைகளை நிறுத்தியுள்ளது.
7 மில்லியன் டாலர் போனஸ்!!!! ஜஸ்ட் மிஸ்…
Date: