கடந்த 7 நாட்களில் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தோருக்கு 9 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.7 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 31 புள்ளிகள் வீழ்ந்துவிட்டன. இரண்டு பங்குச்சந்தைகளிலும் சந்தை மூலதன மதிப்பு மட்டும் 258 லட்சம் கோடி ரூபாய் சரிந்துள்ளன.தகவல் தொழில்நுட்பம், உலோகம் மற்றும் ஊடகத்துறை பங்குகள் சராசரியாக 2-4% சரிவை சந்தித்துள்ளன. உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.இதன் பிரதிபலிப்பாகவே இந்திய பங்குச்சந்தைகளும் வீழ்ந்து கிடக்கின்றன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் அடிக்கடி கடன் விகிதங்களை கூட்டவும் குறைக்கவும் செய்வதால் ஒரு நிலையற்ற சூழல் நிலவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க பொருளாதாரம், பணவீக்கம் ஆகியவை பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அம்சமாக உள்ளது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பதும் பல நிறுவனங்களின் 3-ம் காலாண்டின் நிலை அறிக்கைகளும்,அதானி குழும பங்குகளின் சரிவும்டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவதும் இந்த சரிவுக்கு முக்கிய காரணிகளாக கருதப்படுகிறது. தொழில்நுட்ப காரணிகளும், உலகின் பல நாடுகளில் அதீத வறட்சி, அதீத வெள்ளம் என எல் நினோ மாற்றமும் முக்கிய காரணியாக கூறப்படுகிறது. கடன் பத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப காரணிகளும் பங்கு சந்தையை தீர்மாணிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருவாரத்தில் 9 லட்சம் கோடி போச்சு!!!
Date: