இந்திய அரசாங்கம் 80 சி பிரிவின் கீழ் வருமான வரியை சேமிக்க ஒன்பது வழிகளை சொல்லியிருக்கிறது. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
- இ.பி.எஃப், பொதுநல சேமலாப நிதி, ஆயுள் காப்பீட்டு உறுதி திட்டங்கள், இஎல்எஸ்எஸ் மியூட்சுவல் ஃபண்ட் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் இவைகளில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 1.5 லட்சம் வரிவிலக்குடன், சேமிப்பு என்று பழைய சந்தாதாரர்களுக்கு இரட்டை லாபம் உண்டு. புதிய வரிவிதிப்பில் சந்தாதாரர்களுக்கு இந்தச் சலுகை கிடையாது.
2. அடுத்ததாக ஒருவரை பணியமர்த்தும் நிறுவனம் கொடுக்க கூடிய வீட்டு வாடகை படி, தொலைபேசி மற்றும் இன்டர்நெட், குழந்தைகளின் கல்வி செலவு உள்ளிட்ட செலவினப் பட்டியலில் சலுகை கோரலாம். மற்றொன்று, சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் சம்பளத்தில் மேலதிகமாக 10 சதவீதத்தினை தங்கள் ஓய்வு காலத்திற்காக பிடித்தம் செய்ய கேட்கலாம்.
3. வீடு அல்லது வீடு கட்டுபவர்களுக்கு 1.5 இலட்சம் ரூபாய்வரை தங்கள் வரியில் இருந்து விலக்கு கோரமுடியும்.
- ஆயுள் காப்பீடு போல் சம்பளதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டில் இருந்து வரி விலக்கு உண்டு. சம்பளதாரர்கள், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு 25 ஆயிரம் வரையும், வீட்டில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு 5 இலட்சம் வரையிலும் வரி விலக்கு உண்டு.
5. சம்பளம் வாங்குபவர்கள் 80டியின் படி 5 ஆயிரத்துக்குட்பட்டு உடற்பரிசோதனை செய்ய இயலும். பெற்றோர்களானால் 1.5 இலட்சம் வரை வரிச் சலுகை கோரலாம்.
6. வருமான வரி தாக்கலை உரிய நேரத்தில் முடித்து விடுங்கள். தேவையற்ற காலதாமதத்தை தவிர்த்து விடுங்கள்.
7. எளிய முறையில் வருமான வரி தாக்கலை அரசு சென்ற நிதியாண்டில் அறிமுகப்படுத்தியது.
8.தனிநபர் அல்லது ஒருங்கிணைந்த இந்து குடும்பமோ வருமான வரியை தாக்கல் புதிய அல்லது ஏற்கனவே உள்ள வழிமுறைகளை, எது இலகுவானதோ அதை பயன்படுத்தலாம்.
- மின்னணு முறையில் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு அதை மட்டும் அனுப்பினால் போதும். வருங்கால வைப்பு நிதி, காப்பீட்டு ஆவணங்கள், ஓய்வூதியத் திட்டம் முதலான ஆவணங்களை பராமரியுங்கள். சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் உரிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.