நவம்பர் மாதம் வாகன விற்பனை மிகவும் குறைந்திருக்கிறது.செமி கண்டக்டர், சிப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கம் ஆகியவை வாகன தயாரிப்பாளர்களை தடுமாற வைத்திருக்கிறது. மகிந்திரா அண்ட் மகிந்திராவின் விற்பனை நவம்பர் மாதத்தில் 4.3 சதவீதம் சரிந்து 40,102 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆனது.
கார்களைப் பொறுத்தவரை, அக்டோபர் மாத விற்பனையை விட 3.4 சதவீதம் சரிந்து, 19,458 விற்பனை ஆனது. மகிந்திராவின் ட்ராக்டர் விற்பனை 41 சதவீதம் சரிந்து 27,681 யூனிட்டுகள் விற்பனை ஆனது. டிவிஎஸ் மோட்டார்ஜஸ் நிறுவனம், நவம்பர் மாதத்தில் 2,72 லட்சம் வாகனங்களை விற்பனை செய்தது. இது அக்டோபர் மாதம் விற்பனை செய்த 3,55,033 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 23.19 சதவீதம் குறைவு.
அசோக் லேலண்ட் நிறுவனம் நவம்பர் மாதம் 10,480 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அக்டோபர் மாத விற்பனையில் இருந்து 5.4 சதவீதம் சரிவு கண்டிருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நவம்பர் மாதத்தில் 29,778 வாகனங்களை விற்பனை செய்தது. இது அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.22 சதவீதம் குறைவு. ட்ராக்டர் விற்பனை நிறுவனங்களில் ஒன்றான எஸ்கார்ட் நிறுவனம் 13,514 ட்ராக்டர்களை உள்ளூரிலும் அயல்நாட்டிலும் விற்பனை செய்துள்ளது. விற்பனையை பொறுத்தவரை நிறுவனம் மாதாமாதம் சரிவு கண்டு 47.3 சதவீதத்தை பதிவு செய்திருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நவம்பர் மாதத்தில் 3,79,276 வாகனங்களை விற்பனை செய்தியிருக்கிறது. இது அக்டோபர் மாத விற்பனையை விட 13.7 சதவீதம் குறைவு. இருந்தபோதிலும் இந்த காரீப் பருவ வேளாண்மை உள்ளிட்ட காரணங்களால் விற்பனை உயரும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.