Fixed Deposit திட்டத்துக்கான விதியை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளதால் வங்கியில் டெபாசிட் செய்பவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெரும்பாலான வங்கிகள் கடந்த சில தினங்களாக ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால், டெபாசிட்தாரர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி(RBI) வங்கி Fixed Deposit திட்டத்துக்கான விதிமுறையை மாற்றி அறிவித்துள்ளது.
இந்த புதிய விதியின்படி, வங்கி Fixed Deposit திட்டத்தில் பணத்தை முதலீடு செய்பவர்கள் அதன் முதிர்வு காலம் முடிந்தவுடனே அந்த பணத்தை எடுத்து விட வேண்டும். அவ்வாறு எடுக்கப்படாமல் உள்ள பணத்துக்கும் இனி சேமிப்புக் கணக்கில் வைக்கப்படும் பணத்துக்கு தரப்படும் வட்டியே வழங்கப்படும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை பொறுத்தவரை, பல வங்கிகளிலும் 5-10 ஆண்டுகள் வரை முதிர்வுக் காலம் கொண்ட ஃபிக்சட் டெபாசிட்டுக்கு 5% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. சேமிப்புக் கணக்குகளுக்கு3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரையே வட்டி தரப்படுகிறது. தற்போது, புதிய விதிமுறையின்படி வாடிக்கையாளர்களுக்கு குறைவான வட்டியே கிடைக்கும் என்பதால், ஃபிக்சட் டெபாசிட்தாரர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
State Bank Of India, HDFC Bank, Canara Bank, Kotak Mahindra Bank உள்ளிட்ட வங்கிகள் அண்மையில், ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.