மத்திய அரசு, விவசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதலுக்கான காலக்கெடுவை மே 31, 2022 வரை நீட்டித்துள்ளது என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
மத்திய அரசின் உத்தரவின்படி, மே 14 வரை, சுமார் 18 மில்லியன் டன் கோதுமை மத்திய அரசுக்கு வாங்கப்பட்டுள்ளது எனவும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட இது 51 சதவீதம் குறைவாகும் எனவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையில், தானியங்களின் தரத்தைப் பொறுத்தவரை, பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் விவசாயிகளுக்கு அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வரம்பான 6 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிக்கை தெரிவித்துள்ளது.
இதுவரை, நாடு முழுவதும் சுமார் 21.5 மில்லியன் டன் கோதுமை மண்டிகளுக்கு வந்துள்ளது, அதில் சுமார் 18 மில்லியன் டன்கள் மத்திய தொகுப்பிற்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன எனவும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.