அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதாலும், அவை பங்குச் சந்தை இயக்கத்திற்கு உட்பட்டவை அல்ல என்பதாலும் சிறு சேமிப்புத் திட்டங்கள் மிகவும் பாதுகாப்கானவை என்று மக்கள் நம்புகிறார்கள்.
ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வருமான விகிதத்தைக் கொண்டுள்ளன. பல தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள், வங்கிகளை விட அதிக வட்டியை வழங்குகின்றன.
பொது வருங்கால வைப்பு நிதி 7.1 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு சான்றிதழ் 6.8 சதவீதமாகவும், சுகன்யா சம்ரித்தி யோஜனா 7.6 சதவீதமாகவும், கிசான் விகாஸ் பத்திரம் 6.9 சதவீதமாகவும், சேமிப்பு வைப்புக்கு 4 சதவீத வட்டியையும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களுக்கான தற்போதைய வட்டி விகிதங்களாக வழங்குகிறது.
இதுபோக 1 ஆண்டு கால வைப்புக்கு 5.5 சதவீதம் எனவும், 2 ஆண்டு கால வைப்புக்கு 5.5 சதவீதம் என்றும், 5 ஆண்டு கால வைப்புக்கு 6.7 சதவீதம் என்றும், 5 ஆண்டு தொடர் வைப்பு 5.8 சதவீதம், 5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 7.4 சதவீதம், 5 ஆண்டு மாத வருமான கணக்கு 6.6 சதவீதம் என்றும் வட்டியை வழங்குகின்றன.
அரசாங்கம் ஏன் PPF, SSY, MIS வட்டி விகிதங்களை இப்போது உயர்த்த எதிர்பார்க்கிறது என்ற கேள்விகள் எழாமல் இல்லை. நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி, இரண்டு முறை பணக் கொள்கைக் குழுக் கூட்டங்களில் ரெப்போ விகிதங்களை 90 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தியுள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் சிறந்த வருமானத்தைப் பெறலாம். இந்த முடிவினால் பல தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் தங்கள் FD மற்றும் RD விகிதங்களை உயர்த்தி வருகின்றன.
இதனால்தான் PPF, SSY, MIS வட்டி விகிதங்களை உயர்த்த அரசாங்கம் அடுத்த மாதம் அழைப்பு விடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.