கச்சா எண்ணெய், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீது விதிக்கப்பட்ட புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விண்ட்ஃபால் வரியை அரசு மீண்டும் திருத்தியுள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பின்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான வரி டன்னுக்கு ரூ.17,750லிருந்து ரூ.13,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஜெட் எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி பூஜ்ஜியத்தில் இருந்து லிட்டருக்கு ரூ.2 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
டீசல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி பூஜ்யமாக தொடர்கிறது.
ஜூலை 1ம் தேதி விதிக்கப்பட்ட விண்ட்ஃபால் லெவியில் இது மூன்றாவது திருத்தம் ஆகும். உலக கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செஸ் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
புதிய கட்டணங்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 19) முதல் அமலுக்கு வரும் என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.