ரிலையன்ஸ் நிறுவனம் 45 ம் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று பகல் 2மணிக்கு நடக்கிறது. இன்றைய கூட்டத்தை 5சமூக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதும் இந்த கூட்டத்தில் 5ஜி குறித்த அறிவிப்பு கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், அடுத்தகட்ட முதலீடுகள் குறித்தும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவிப்பார் என எதிர்பார்க்க படுகிறது.
இவை தவிர ரிலையன்ஸ் குழுமம் அடுத்ததாக அடி எடுத்து வைக்க உள்ள ஹைட்ரஜன் திட்டம், சோலார் திட்டங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது. அம்பானியி ன் அடுத்த கட்ட திட்டம் பசுமை ஆற்றல் சார்ந்ததாக இருக்கும் என்றும். முகேஷ் அம்பானி தனது நிறுவன பொறுப்புகளை பிள்ளைகள் இடம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Virtual reality எனப்படும் மெய்நிகர் முறையில் நடக்க உள்ள முதல் ஆண்டு பொதுக்கூட்டம் என்ற பெருமையையும் இன்றைய கூட்டம் பெற்றுள்ளது. அம்பானியி ன் அறிவிப்பு சந்தைகளில் மாற்றம் ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டு அறிவிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது