மத்திய ரயல்வேயின் கீழ் இயங்கி வரும் irctc அமைப்பின் ofs திட்டத்தை, நிலையற்ற பங்குச் சந்தை சூழலால் அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக ஐ அர் சிடிசி விளக்கம் அளித்துள்ளது.
அதில், எந்த முடிவையும் மத்திய அரசே எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தங்கள் தரப்பில் முறையான தகவலை கேட்டு பெறாமல் செய்தி வெளியிடப்பட்டு உள்ளதாகவும் IRCTC தெரிவித்துள்ளது. முதலில் வெளியான தகவலின்படி IRCTC யின் 3 .5% பங்குகளை விற்று 3000கோடி ரூபாய் நிதியை அரசு திரட்ட இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது வரை ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்ய உதவும் ஒரே அமைப்பாக irctc உள்ளது. 2019 ம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஜூன் முடிவில் 245.5 கோடி ரூபாய் வருவாயை லாபமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.