தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது புதிய பொது பங்கு வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 5- ம் தேதி முதல் அந்த நிறுவன பங்குகளை மக்கள் வாங்க முடியும். ஒரு பங்கின் விலை 500-525 ரூபாயாக இருக்குமென அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பங்குகளை வரும் 7-ம் தேதி வரை வாங்கிக்கொள்ள முடியும். மொத்தம் 1,58,40,000பங்குகள் மூலம் நிதி திரட்ட படுகிறது. ஒவ்வொரு பங்கின் அடிப்படை விலை 10ரூபாயாக உள்ளது.
இந்த வங்கி நாட்டில் உள்ள பழமை வாய்ந்த நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். தூத்துக்குடி மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனம்50 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இதில் 41.8லட்சம் பேர் தமிழர்கள்.
இந்த நிறுவனத்தின் கிளைகள் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, டெல்லியில் உள்ளன.
இந்த வங்கிக்கு நாடு முழுக்க 508 கிளைகள், உள்ளன. அவற்றில் 106 கிளைகள் கிராமங்களில் உள்ளன. கடந்த மார்ச் மாதம் முடிந்த நிதியாண்டில் இந்த நிறுவன மொத்த வருவாய் 4,656கோடி ரூபாய் ஆக உள்ளது.