காய்கறிகள் உண்டால் நீண்ட நாள் வாழலாம்.. இயற்கை உணவுகளை உண்டால் மட்டுமே ஆரோக்கியம் கிடைக்கும்… இன்று பங்குச்சந்தையில் முதலீடு செய்து 2 மாதத்தில் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்ற சாமானிய மக்களின் மனதில் குடி கொண்டு இருக்கும் அனைத்து எண்ணங்களையும் தவிடு பொடியாக்கி, கோக், பர்கர், ஹாட்டாக்ஸ் என்று இன்றைய உலகம் உடலுக்கு கேடு விளைவிப்பவை என்று எவற்றை எல்ல கூறிகின்றனவோ, அவற்றையே காலம் காலமாக தன்னுடைய அன்றாட உணவாக உண்டு, இன்று 92 வயதையும் கடந்து வாழ்ந்து வருபவர், முதலீட்டு தந்தை என்று அழைக்கப்படும் வாரன் ப்ஃபெட்.
அதே போல், ஒரு பங்கை வாங்கினால், பல ஆண்டுகளுக்கு அதை வைத்திருந்து, அதில் நல்ல பணம் சம்பாதித்தவர், உலக பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட். இன்று அவருடைய சொத்து மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர்.. உண்மையான கணக்கு 300 பில்லியன் டாலர் வரை இருந்தது. அதில் ஒரு தொகையை மலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வழங்கிவிட்டு, மீதத்தை வைத்து இருக்கிறார்.
கோக் குடிப்பது, ஐஸ்கிரீம் சாப்பிடுவது, உருளை கிழங்கு சிப்ஸ், பர்கர் என 92 வயதிலும் நொருக்கு தீனிகள் தான் இவரின் உணவு என்றே கூறலாம். தன் உடல் கால் சதவிதம் கோக்க கோலாவால் ஆனது என்றும் அவர் கூறியிருக்கிறார். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 1.5 லிட்டர் அளவிற்கு கோக் குடிப்பவர் வாரன் ப்ஃபெட். அரை நூற்றாண்டிற்கு முன்னர் பெப்சியை விரும்பி குடித்து வந்த வாரன், பின்னர் கோக்கிற்கு மாறினார். அதேபோல், தான் குடிக்கும் குளிர்பான கம்பெனியில் முதலீடு செய்யவும் அவர் தவறியது இல்லை.
இவருக்கு காய்கறிகள் என்றால் பிடிக்கவே பிடிக்காது. அதுவும் பிரோக்கலி என்றால் ஆகவே ஆகாது. இனிப்பு உணவு எந்த அளவிற்கு வாரன் ப்ஃபெட்டிற்கு பிடிக்குமோ, அதே அளவிற்கு உப்பு போட்ட உணவுகளை இன்றும் விரும்பி சாப்பிட்டு வருகிறார்.