நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சில் என்ற அமைப்பு fsdc எனப்படுகிறது. இந்த அமைப்பின் 26வது உயர் மட்ட கூட்டம் வரும் 15 ம் தேதி மும்பையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் நாட்டின் முக்கிய நிதித்துறை அரசு அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். Fsdc அமைப்பின் கூட்டத்துக்கு நிதியமைச்சர் தலைமை தாங்க உள்ளார் . இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் தற்போதைய பொருளாதார நிலை யை மேம்படுத்துவதற்கான ஆலோசனை மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி பற்றி பேச உள்ளனர்.
மேலும் நாட்டின் பணவீக்கம் 6.7%ஆக உள்ளது. இதனை 6% க்கு உள்ளே வைப்பது குறித்து பேச உள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 80ரூபாயாக உள்ளது பற்றியும். அமெரிக்க பெட் ரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் வரிகள் உயர்வு பற்றி கூறியது குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.