உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் கச்சா எண்ணெய் டன்னுக்கு 300ரூபாய் ,இன்று முதல் windfall tax என்ற வகையில் உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டு உள்ளது.
இதே வரி 17ஆயிரத்து750 ரூபாயில் இருந்து கடந்த மாதம் 19 ம் தேதி தான் டன்னுக்கு 13,000ரூபாயாக குறைக்கப்பட்டது. இரண்டு வார இடை வெளியில் மீண்டும் வரி உயர்ந்துள்ளது.
இதேபோல் விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான வரியும் லிட்டருக்கு இரண்டில் இருந்து 7ரூபாய் உயர்ந்து 9ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் உள்நாட்டில் உற்பத்தி செய்த டீசலை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் அதற்கான வரியும் லிட்டருக்கு 6இல் இருந்து 12 ரூபாயாக அதிகமாகியுள்ளது. Windfall வகை வரிகள் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் வசூலிக்க தொடங்கப்பட்டது பின்னர் ஒவ்வொரு 15நாளுக்கும் ஒரு முறை வரி உயர்த்துவது குறிப்பிடத்தக்கது