இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகளை வைத்து நிதி திரட்ட IPO எனப்படும் புதுப்பங்கு வெளியீடு உதவுகிறது. அண்மைகாலமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக தொகைக்கு பங்குகளை மேற்கோள் காட்டி நிதி திரட்டுவதாகவும் இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரிய இழப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி தலையிட்டு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று முதலீட்டாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் செபி அமைப்பின் தலைவர் மதாபி பூரிபுச் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பங்குகள் எவ்வளவு ரூபாய்க்கு விற்க வேண்டும் என்று நிர்ணயிப்பது செபியின் வேலையில்லை என்றும், நிறுவனங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஒவ்வொரு பங்குகளின் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும், இதில் செபியின் பங்கு ஏதும் இல்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். எத்தனை ரூபாய்க்கு பங்கு வெளியீடு நடக்கிறது என்பதை மட்டும் தங்களிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்றும் செபி கூறியுள்ளது.பங்கு வெளியீடுகளின் விலையை தங்களுக்கு தெரியப்படுத்தினால் சந்தை அபாயங்கள் குறித்து கணிக்கவும் , பொதுமக்களுக்கு தகவல்களை அளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விருப்பமான விலைய வச்சிக்கங்க….
Date: