முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது செல்போன்களில் 5ஜி வசதியை வரும் டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் வெளியான எந்த ஐபோனிலும் 5ஜி சேவைக்கான சாஃப்ட்வேர் அப்டேட் இல்லாததது பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் 5ஜியை பரிசோதித்து பார்த்துள்ளதாகவும், இதற்கான சாஃப்ட்வேர் அப்டேட்களை வரும் டிசம்பரில் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வோடபோன் நிறுவன 5ஜி சேவை மட்டும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 12,13 மற்றும் புதுவரவான 14 மாடல் போன்களில் 5ஜிக்கான வசதி ஏற்கனவே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான சாஃப்ட்வேர் அப்டேட் வரும் பட்சத்தில் தற்போது ஐபோன் பயன்படுத்தி வரும் பயன்பாட்டாளார்கள் அதிவேக இணையத்தை பயன்படுத்த முடியும்.
5ஜி வசதியின் மூலம் அதிவேக இணைய நுகர்வு,வீடியோகாலில் தெளிவு மற்றும் அப்லோடு மற்றும் டவுன்லோடு செய்வதில் கூடுதல் வேகம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.