உலகிம் முழுவதும் பிரபலமடைந்து வரும் டிவிட்டர் நிறுவனத்தின் செயலி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துவோர்
எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்க முயற்சித்து தீவிரம் காட்டி வரும் சூழலில்
அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ தரவுகள் கசிந்துள்ளன.
அதில் டிவிட்டர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட கணிசமாக குறைந்திருப்பதாகவும்
வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எந்நேரமும் டீவீட் செய்தபடி இருக்கும் பயனர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் இல்லை என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
10 விழுக்காடு பயன்பாட்டாளர்கள் மூலம் மட்டுமே வருவாய் கிடைப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கிரிப்டோ கரன்சிகள் பாதுகாப்பானதாக இல்லை என்று பலரும் கருதுவதாலும் டிவிட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை
குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது முகம் சுளிக்கும் அளவுக்கு மோசமான உள்ளடக்கங்கள் அதிகரிப்பதும் டிவிட்டர் மீதான நம்பிக்கை குறைய காரணமாக கூறப்படுகிறது டிவிட்டரில் சிறப்பான அம்சங்கள் பெரிய அளவில் இல்லை என்பதாலும், இன்ஸ்டாகிராம் மற்றும் சீனாவின் டிக்டாக் நிறுவனங்கள் உலகளவில் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதும் டிவிட்டரின் வளர்ச்சிக்கு தடையாக மாறியுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சரி நாங்க போயிட்டு வரோம் byeeee…
Date: