சாதாரண பொதுமக்களும் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டுமானால், நாட்டில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வரவேண்டும், பணவீக்கம் குறைய வேண்டும், இந்த இரண்டு காரணிகளால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும். இதனிடையே மத்திய ரிசர்வ் வங்கி ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர் பணவீக்க விகிதம் ரிசர்வ் வங்கி வகுத்த 2 முதல் 6%க்குள் இருக்கவேண்டும். இந்தாண்டில் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவாக பணவீக்க விகிதத்தின் அளவு 5.88%ஆக சரிந்துள்ளது. கடந்த அக்டோபரில் இந்த அளவு 6.77%ஆக இருந்தது. டிசம்பர் மாதத்தில் இந்த அளவு 6.40% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வில் முக்கிய பங்கு வகிப்பது உணவுப்பொருட்கள் விலையேற்றம்தான். உள்நாட்டில் குளிர்காலத்தில் பல பொருட்களின் அதிகரித்து உற்பத்தி(விவசாய பொருட்கள்) விலை குறைந்தாலும், பல நிறுவனங்களின் செயல்பாடுகள் குறைந்துள்ளன
பெயரளவுக்கு குறைந்துள்ள சில்லறை பணவீக்கம்.., உண்மை நிலைதான் என்ன?
Date: