அரசு ஊழியர்கள் தொழில்தொடங்க 1 வருடம் லீவும் கொடுத்து சம்பளம் தருகிறது ஒரு நாடு. ஐக்கிய அரபு நாடுகளில் இந்த புதிய வசதி வரும் 2-ம் தேதியில் இருந்து அமலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதில் என்ன பிரமாதம் என்று கேட்கிறீர்களா…அரசுப்பணியாளர்கள் சுயமாக வேலைகளை செய்வதை ஊக்குவிக்கவே இந்த முயற்சியை ஐக்கிய அரபு அமீரக நாடு அறிவித்துள்ளதாக கலீஜ் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. அங்கு தற்போது ஆட்சி செய்து வரும் துணை அதிபரும்,பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தம் என்பவர் இது தொடர்பான முன்வடிவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். இதன்படி ஒரு முழு ஆண்டு அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம், ஆனால் 6 மாதத்துக்கு மட்டுமே சம்பளம் தரப்படும், ஓராண்டுக்குள் தொழில் சரியாக செல்லவில்லை என்றால் மீண்டும் அரசுப்பணியையே அந்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதை ஊக்கப்படுத்த பல்வேறு வகையான திட்டங்களை ஐக்கிய அரபு அமீரக அரசு வகுத்து வரும் சூழலில், அரசு ஊழியர்களில் தொழில் தொடங்க விரும்புவோருக்கும் வாய்ப்பளித்துள்ளது உலகம் முழுவதும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
1 வருடம் லீவும் கொடுத்து, சம்பளம் தரும் நாடு!!!
Date: