உக்ரைனுடன் போர் செய்து வரும் ரஷ்யாவிடம் இருந்து ஏன் கச்சா எண்ணெயை வாங்குகிறீர்கள் என்று தொடர்ச்சியாக மத்திய அரசின் பிரதிநிதிகள் மீது வெளிநாட்டு ஊடகங்கள் கேள்விக்கனைகளை தொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் இதுபற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதில் எங்கு மலிவாக பெட்ரோலிய பொருட்கள் கிடைக்கிறதோ அங்கேதான் இந்தியா பெட்ரோல் வாங்குகிறது என்றார். ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொண்டாலும் பாதிப்பு இருக்காமல் போகலாம் ஆனால் இந்தியா போன்ற குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் அப்படி செய்ய முடியாது. கச்சா எண்ணெய்க்கு அதிக பணம் தரும் சூழலிலும் இந்தியா இல்லை என்றும் அவர் பதிலளித்துள்ளார். வழக்கமாக கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி வரும் ஈராக்,சவுதி அரேபியா, உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து எண்ணெயை வாங்காமல் தொடர்ந்து அதிகபட்சமாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை அதிகபட்சமாக வாங்கி குவித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள் தரும் அழுத்தத்தால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை சவால் நிறைந்ததாக உள்ளதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா போர் பற்றி பேசியுள்ள ஜெய்சங்கர், இந்தியா ரஷ்யா பக்கமா,இல்லை உக்ரைன் பக்கமா என்றால் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
“இதுக்கு அதிகம் பணம் தரும் நிலையில் இல்லை”
Date: