உலகளவில் தலை சிறந்த சொகுசு கார்களின் எப்போதும் உண்டு. இந்த நிறுவனத்தை Ferruccio Lamborghini என்பவர் உருவாக்கினார். தற்போது அவரின் மகன் tonino நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இந்த சூழலில் இத்தாலியைச் சேர்ந்த டோனினோ கேரளாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். அவரை கேரள தொழில்துறை அமைச்சர் ராஜிவ் கொச்சியில் நேரில் சந்தித்து பேசினார். கார் உற்பத்தி செய்யவும், கேரளாவைச் சேர்ந்த சில பணக்கார நபர்கள் காரை வாங்க பணம் படைத்தவர்களாக உள்ளனர் என்றும் அமைச்சர் பேசியிருந்தார். இந்த சந்திப்பு கடந்த 7ம் தேதி நடைபெற்றது. இது பற்றி தனது முகநூல் பக்கத்தில் ராஜிவ் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் இரு தரப்பினரும் கேரளாவில் லம்போர்கினியின் நிறுவனம் முதலீடு செய்வது குறித்து பேசியதாகவும், அந்த முதலீடானது சொகுசு ஹோட்டல்கள்,வீடுகளில் செய்யவும் திட்டமிடப்பட்டதாக தெரிவித்தார். ஆலையை கேரளாவில் நிறுவுவது குறித்து வெளிநாடுகளில் இருந்து விரைவில் ஒரு நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய இருப்பதாகவும் ராஜிவ் தெரிவித்துள்ளார்.
சபாஷ்!!! சைலன்ட்டாக கேரளா அரசு செய்த வேலை!!!
Date:




