அண்மையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பலரும் இந்த பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை என்று கலாய்த்து வருகின்றனர். இந்த சூழலில் பட்ஜெட்டில் இடம்பிடித்துள்ள அம்சங்கள் குறித்து மத்திய வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ராவிளக்கம் அளித்துள்ளார். அதில் மத்திய அரசு வரிச்சலுகைகள் இல்லாத குறைவான வருமான வரி விதிக்கவே அரசு ஆர்வம் காட்டி வருவதாக கூறினார். ஒரு தனிநபர் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால் அவர் பழைய வருமான வரி திட்டத்தின்படி 3.75 லட்சம் ரூபாயை வரிச்சலுகையாக பெறுகிறார். ஆனால் புதிய வருமான வரித் திட்டத்தில் சலுகைகள் அல்லாமல் குறைந்த வரியே விதிக்கப்படுகிறது என்றார். 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வருமான வரித்திட்டத்தில் 7 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்தத்தேவையில்லை என்று குறிப்பிட்டார். புதிய விதிப்படி 3 லட்சம் ரூபாய் வரை வரி ஏதும் இல்லை என்றும் 3 முதல் 6 லட்சம் ரூபாய் வரை உள்ளோருக்கு 5%வருமான வரியும் விதிக்கப்பட உள்ளது. 6-9 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுவோர் 10% வருமான வரியாக செலுத்த வேண்டியுள்ளது. 9-12 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுவோர் 15%,12-15லட்சம் சம்பளம் பெறுவோர் 20%, 15 லட்சத்துக்கும் அதிகம் சம்பளம் பெறுவோர் அரசுக்கு 30% வருமானவரி செலுத்த வேண்டியுள்ளது. புதிய விதிப்படி10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறும் நபர் , பல்வேறு முதலீடுகளாக 2 லட்சத்து 62ஆயிரத்து500 ரூபாயை வரிச்சலுகையாக கணக்கு காட்டிவிட முடியும், மீதத்தொகைக்கு மட்டும் வருமான வரி செலுத்தினால் போதுமானது.
வருமான வரி – இது வெறும் டிரைலர் தான்!!!
Date: