அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஒற்றை அறிக்கை அதானியின் இத்தனை ஆண்டுகள் சாம்ராஜ்ஜியத்தை ஆட்டிப்படைத்ததுவிட்டது என்றால் அது பொய் இல்லை. இதே அதானி குழுமம் கடந்த செப்டம்பர் மாதம் 290 பில்லியன் அமெரிக்க டாலர் மூலதன மதிப்பீட்டை கொண்டிருந்தது. ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு அதாவது ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு அதானி குழுமத்தின் மதிப்பு 100 பில்லியன் டாலருக்கும் கீழ் சென்றுவிட்டது. அதானி பவர் என்ற ஒற்றை நிறுவனத்தைத் தவிற மற்ற அனைத்து நிறுவனங்களும் பூஜ்ஜியம் புள்ளி 5 முதல் 6 % வரை சரிவை சந்தித்துள்ளன. அதானி பவர் மட்டும் 5 சதவீதம் ஏற்றமும்,அதானியின் டோட்டல் கேஸ்,அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் 5 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளன. அதானி குழும முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு அண்மையில் விசாரித்தனர். அதில் செபி ஏற்கனவே விசாரணை நடத்துவதாக கூறியிருந்த நிலையில்,சீல் வைக்கப்பட்ட கவரில் யார்யாரை விசாரணை நடத்த அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை அளித்தது.இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த தாங்களே சுதந்திரமான ஒரு அமைப்பை அறிவிக்க இருப்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து பங்குச்சந்தைகளில் அதானி குழும நிறுவன பங்குகள் மீண்டும் சரியத் தொடங்கியுள்ளன.
இனி அதானி குழுமம் ஒன்னும் அத்தாம் பெரிய கம்பெனி இல்ல..
Date: