வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 175 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 288 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. மும்பை பங்குச்சந்தையை போலவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 392 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. துவக்கத்தில் இருந்து சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தையில் கடைசி ஒருமணி நேரம் சற்று ஆறுதல் அளித்தது. Adani Enterprises, Bajaj Auto, UPL, Tata Steel ,Infosys ஆகிய நிறுவனங்கள் பலமாக அடிபட்டன.ICICI Bank, Kotak Mahindra Bank, Power Grid Corporation, SBI மற்றும் HDFC Lif ஆகிய நிறுவனங்கள் லாபத்தை சந்தித்தன. வங்கித்துறை பங்குகள் 1விழுக்காடும், ரியல் எஸ்டேட் துறை பங்குகளில் சில 2% உயர்ந்தது.ஆட்டோ மொபைல்,தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலோகத்துறை பங்குகள் 1 முதல் 2% சரிவை சந்தித்தன. தங்கமும் மக்களுக்கு சாதகமான விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 9 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 201 ரூபாயாக விற்பனை ஆகிறது.ஒரு சவரன் தங்கம் 72 ரூபாய் சரிந்து 41 ஆயிரத்து 608 ரூபாயாக உள்ளது. பெரிய ஆட்டம் போட்ட வெள்ளி ஒரு கிராமுக்கு 1 ரூபாய் சரிந்து 69 ரூபாயாக்கும், கட்டி வெள்ளி கிலோ 69 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.(இந்த விலைகள் 3% ஜிஎஸ்டி இல்லாமல் குறிப்பிடப்பட்டுள்ளன).
விண்கல் போல சரிந்து விழும் பங்குகள்!!!
Date: