கோடிகளில் பணம் வைத்திருப்பவர் ஒரு வகை கோடீஸ்வரன் என்றால் , விட்டதை பிடிக்க விடாமல் போராடுபவரும் கோடீஸ்வரன் என்றால் அது மிகையல்ல., வேடிக்கையாக சில சேட்டைகளை செய்தாலும் எலான் மஸ்க் திறமைசாலி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். டிவிட்டரை வாங்கியதும் கெட்ட நேரம் துவங்கிவிட்டது என்று பலரும் அவரை விமர்சித்தனர். இந்த சூழலில் அவர் டிவிட்டரை தங்க முட்டையிடும் வாத்தாகவே பார்த்தார்.டிவிட்டரை பயன்படுத்துவோர் மாத சந்தா செலுத்தினால் சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்து உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார். வளைத்து வளைத்து கடன் வாங்கிய எலான் மஸ்க் , தற்போது மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துவிட்டார். பிரான்ஸைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் லேசான சருக்கலை சந்தித்ததை அடுத்து மஸ்க் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கடந்தாண்டு டிவிட்டர் மற்றும் டெஸ்லா நிறுவன பங்குகள் சரிந்து விழுந்ததால் தடுமாறிய மஸ்குக்கு தற்போது அந்த நிறுவனங்களே கைகொடுத்துள்ளன. பெர்னார்ட் அர்னால்டின் சொத்துமதிப்பு 185.3பில்லியன் அமெரிக்க டாலர்களா இருந்தது.இந்த சூழலில் மஸ்கின் சொத்துமதிப்பு 187.1 பில்லியன் டாலராக மீண்டும் உயர்ந்துள்ளது. டெஸ்லாவின் வருங்கால திட்டங்கள் குறித்து மார்ச்1ம் தேதி அந்நிறுவன அதிகாரிகள் ஆலோசிக்க உள்ள சூழலில் டெஸ்லாவின் பங்குகள் பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளன.
சர்ச்சையில் சிக்கினாலும் மீண்டும் முதலிடம் பிடித்த ஜாம்பவான்!!!
Date: