இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவரும் ஆதார் ஆர்கிடெக்டுமான நந்தன் நீலகேணி அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பல வணிகங்களுக்கும் தனிநபர்களுக்கும் கடன் தர தரவு சார்ந்த கடன் தரும் திட்டம்தான் சரியானது என்று கூறியுள்ளார். தரவு சார்ந்த கடன் தரும் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான தனிநபர்கள் பலனடைவார்கள் என்றும் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் கடன் வாங்குவது மேலும் எளிமையாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அக்கவுண்ட் அக்ரிகேட்டர் என்ற நுட்பம் மூலம் தற்போது பயன்படுத்தப்படும் காகித ஆவணங்கள் முழுமையாக நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி,காப்பீடுகளுக்கு பயன்தரும் IRDA,செபி உள்ளிட்ட அமைப்புகளும் AAபிரேம்ஒர்க்கின் கீழ் தரவுகளை எளிமையாக பகிர்ந்துகொள்ள முடியும் என்றும் நந்தன் கூறியுள்ளார். 2 கோடி சிறு வணிகர்கள் கடன் உதவி பெற முடியும் சூழல் இருந்தால் 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா பிரீபெய்டு பொருளாதாரத்தில் இருந்து போஸ்ட் பெய்டு பொருளாதாரத்துக்கு மாறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“தரவு சார்ந்த கடன் தரும் முறை சிறப்பானது”
Date: