இந்தியாவில் குறைந்த விலையில் கார்கள் வாங்கவேண்டுமானால் பலரின் முதல் சாய்ஸ் நிசான் கார்களாகத்தான் இருக்கிறது. பல சமயங்களில் நிசான் கார்கள் விலைக்காக மட்டுமின்றி இலகுவாக பயணிப்பதற்கும் உதவுவதாக அதன் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தற்போதுள்ள பெட்ரோல் கார்களின் மாடல்களிலேயே ஹைப்ரிட் கார்களை களமிறக்கவும் நிசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2026ம் ஆண்டுக்குள் தற்போதுள்ள பெட்ரோல் கார்களுக்குள் பவர் டிரெய்ன் எனப்படும் நுட்பத்தையும் புகுத்த நிசான் திட்டமிட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் உலகளவில் 27 வித்தியாசமான மின்சார கார்களை களமிறக்க திட்டமிட்டுள்ள நிசான் நிறுவனம் , இதில் 19 மாடல்கள் முழுமையாக பேட்டரியில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட இருக்கின்றன. 2019ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக அதைவிட இலகுவான, வலிமையான பொருட்களை உற்பத்தி செய்து தனது கார்களில் பயன்படுத்த அந்நிறுவனம் ஆய்வுகளை தொடங்கியுள்ளது. சாலிட் ஸ்டேட் வகை பொருட்களை களமிறக்கும் நிசான் அதிக செலவு பிடிக்காமல் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது கெய் எனப்படும் குட்டி ரக பேட்டரிகார்களையும்,நடுத்தர கார்களையும் உற்பத்தி செய்வதில் நிசான் தீவிரம் காட்டி வருகிறது. பவர் டிரெயின் எனப்படும் பேட்டரிகள் எடை குறைவாக இருந்தால் அதன் மூலம் வாகனம் வேகமாக பயணிக்கும் என்றும் , எனவே எடை குறைவான பவர் டிரெயின்களை நிசான் பரிசோதித்து பார்க்கிறது.
மின்சார கார்களில் மாற்றங்களை செய்யும் நிசான் நிறுவனம்…
Date: