கடுமையான நிதி நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை, கிட்டத்தட்ட 3 மடங்காக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், ரஷ்யாவிடம் இருந்து 50 டாலருக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெய் வாங்க முயற்சி நடக்கிறது. அதாவது ஜி7 நாடுகள் ஏற்கனவே ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு அதிகபட்ச விலையாக 60 டாலர் நிர்ணயித்தது.,தற்போது பாகிஸ்தான் 50 டாலருக்கு வாங்க முயற்சிகளை செய்து வருகிறது. உலகளவில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 82 டாலர் 78 சென்ட் அளவில் உள்ளது. தங்கள் நாட்டில் நிலவும் கடும் நெருக்கடியை சுட்டிக்காட்டி குறைந்தவிலைக்கு கச்சா எண்ணெயை வழங்க பாகிஸ்தான் திட்டமிட்டு இருக்கிறது.எனினும் பாகிஸ்தானின் கோரிக்கையை ரஷ்யா ஏற்குமா என்பதே தற்போதைய கேள்வியாக இருக்கிறது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் பாகிஸ்தானுக்கு அடுத்தமாதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அது எத்தனை டாலர்களுக்கு விற்கப்போகிறார்கள் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. ரஷ்யாவில் இருந்து பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் வரவேண்டுமெனில் 30 நாட்கள் பிடிக்கும், மேலும் கச்சா எண்ணெயை ஏற்றி வந்து பாகிஸ்தானுக்கு தரும் செலவு ஒரு பேரலுக்கு 10 முதல் 15 டாலர் உயரும் என்றும் கூறப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையே உள்ள நட்புறவை மேம்படுத்த அடுத்த மாதம் ஒரு கப்பலில் மட்டும் கச்சா எண்ணெயை ரஷ்யா அனுப்பி வைக்க இருக்கிறது, அது வெற்றிபெறும்பட்சத்தில் வருங்காலத்தில் கூடுதலாக கச்சா எண்ணெய் கிடைக்க வாய்புள்ளது. இந்தியாவுக்கு மட்டும் சலுகை விலையில் கச்சா எண்ணெய் தருகிறீர்கள் ஏன் எங்களுக்கு 30% தள்ளுபடி தரமறுக்கிறீர்கள் என்று ரஷ்யாவிடம் கேட்டு பல்ப் வாங்கியிருந்தது பாகிஸ்தான். பாகிஸ்தான் இறக்குமதியில் மிகமுக்கிய பங்கு வகிப்பது எரிபொருள் துறை மட்டுமே.ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை பாகிஸ்தான் வாங்கிவிட்டால் அந்நாட்டில் நிலவும் பிரச்சனைகள் சற்றே தீர வாய்ப்புள்ளது. கடந்தாண்டு ஜூலை 1ம் தேதி 10.30 பில்லியன் டாலராக இருந்து பாகிஸ்தானின் வெளிநாட்டு நிதி கையிருப்பு,தற்போது மெல்ல சரிந்து 4 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. பாகிஸ்தானில் தற்போதைய நிலைக்கு கடந்தாண்டு பெய்த கனமழையே காரணமாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட அந்த மழை வெள்ள பாதிப்பால் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டனர்.கிட்டத்தட்ட பன்னிரெண்டரை பில்லியன் அளவுக்கு பொருளாதார இழப்பை அந்த நாடு சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
பங்காளியின் பக்கா ஸ்கெட்ச் ஒர்க்அவுட் ஆகுமா..பார்போம்…
Date: