சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ரஷ்யாவின் வான் பரப்புவழியாக பயணிக்கும் விமானங்களுக்கு தடை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்புப்குழு இது பற்றி ஆராய்ந்து அதிபர் ஜோ பைடனுக்கு அறிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை அமெரிக்க விமானங்கள் ரஷ்ய வான்பரப்பை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவில் இருந்து ரஷ்யா வழியாக பறந்து வருவதால் சீன விமானங்களுக்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சந்தை மதிப்புள்ள லாபம் கிடைக்கிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சண்டை நிலவி வந்தாலும், வெளியே நின்று வேடிக்கை பார்க்கும் சில நாடுகளின் பட்டியலில் உள்ள நிறுவனங்களான சீனா கிழக்கு,எமிரேட்ஸ், ஏர்இந்தியா ஆகிய நிறுவனங்கள் பெரிய லாபத்தை ரஷ்யா வழியாக பறப்பதால் பெறுகின்றன. கடந்த 2014ம் ஆண்டு MH17 ரக விமானம் பறந்தபோது சுட்டுவீழ்த்தப்பட்டது போன்ற பாதுகாப்பு குறைபாடுகளுக்கும் வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் ரஷ்யா வழியாக பயணிக்க சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ரஷ்ய விமானங்கள் அமெரிக்கா மீதும், அமெரிக்க விமானங்கள் ரஷ்யா மீதும் கடந்த ஓராண்டுக்கும் மேல் பறக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்தநாட்டு பக்கம் வந்தா தடை விதிக்கப்போகும் நாடு!!!
Date: