கொரோனா என்ற கொடிய பெருந்தொற்று மக்களின் உடல் நலனில் மட்டுமல்ல, டெக் நிறுவனங்களின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுள்ளது. கொரோனா நேரத்தில் பந்தாவாக பலரும் வீட்டில் இருந்தே பணியாற்றிய நிலை தற்போது மெல்ல மாறிவிட்டது. இந்த நிலையில் கொரோனாவுக்கு பிறகு உலகின் பல நாடுகளிலும் டெக் நிறுவனங்கள் சுமார் 5 லட்சம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். விமியோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் பெருந்தொற்று நேரத்தில் இருந்ததைவிட 93 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளன. தற்போது அனைத்து துறைகளிலும் ஆட்டோமேஷன் என்ற தானியங்கி முறை வந்துவிட்டதால் , டெக் ஊழியர்களின் பங்களிப்பு குறைந்துவிடுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சாட் ஜிபிடி மாதிரியான செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் வழக்கத்தை விட அதிக ஆதிக்கம் செலுத்தி வருவதால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது அத்தியாவசிய தேவைகளுக்கான தொழில்நுட்பம் மட்டுமே தற்போது அதிக வளர்ச்சி அடைந்து வருவதாக கூறும் நிபுணர்கள், உலகளவில் டெக் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களாக உள்ளவர்களின் தேவையும் மாறியுள்ளது என்று கூறுகின்றனர். டெக் பணியாளர்களில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த படிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்படும் என்றும், அது சார்ந்த டெக் ஊழியர்களுக்கு வருங்காலத்தில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வேலைவாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள புதுப்புது நுட்பங்களை படிப்பதும் அவசியமாகும் சூழலில் வேலை இழப்புக்கு தீர்வு என்பது குறித்து தெளிவான விளக்கத்தை தருவதில் நிபுணர்களுக்கே தயக்கம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
டெக் பணியாளர்கள் வேலைவாய்ப்பு பறிபோவதால் ஏற்படும் சிக்கல்கள்..
Date: