ஜனவரி 24ம் தேதிக்கு முன்பு வரை கெத்தாக வலம் வந்த அதானி குழுமம், அமெரிக்க ஹின்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு மிகப்பெரிய இழப்புகளை சந்தித்துள்ளன.இந்த நிலையில் 220 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடன் தேவைப்படுவதால் 6க்கும் மேற்பட்ட வங்கிகளிடம் அதானிகனெக்ஸ் என்ற கூட்டு நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. கடனாக வாங்கும் இந்த பணம் அடுத்த 5 ஆண்டுகளுக்கான நிறுவன முதலீடுகளாக மாற இருக்கிறது. கிட்டத்தட்ட கடன் உறுதியாகிவிட்ட நிலையில் அடுத்த ஓரிரு வாரங்களில் அதானி கனெக்ஸ் நிறுவனத்துக்கு பணம் கிடைத்துவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நிறுவனத்துடன் கூட்டு வைத்து டெக் சேவைகளை அதானி கனெக்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. டேடே்டா சென்டர் என்ற இணைய சேவைகளை வழங்கும் அதானி கனெக்ஸ் நிறுவனம் விர்ஜினியாவில் இயங்கி வருகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு சுமார் 100 பில்லியன் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ள அதானி குழுமம்,அதற்கு முன்பாக பல அதிரடி திட்டங்களை வகுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு வாங்கும் பெரியகடன்
Date: