இந்தியாவின் பொருளாதாரத்தை வாட்டியெடுக்கும் கோவிட்-19!

Date:

அறிகுறிகள் ஒரு புதிரான கலவையாக இருக்கிறது. மந்த நிலை, பொதுவான மயக்கம், மன அழுத்தம் மற்றும் எதிலும் கவனம் செலுத்த இயலாமை ஆகியவை இந்த அறிகுறிகளில் அடங்கும். இது நீண்ட கால கோவிட் பெருந் தொற்றுப் போன்றது. வைரஸ் தொற்றில் இருந்து மெதுவாக குணமடைவதன் மூலமாகப் பாதிக்கப்பட்டவர் ஒரு மனிதர் அல்ல, இந்த தாக்குதலில் சிக்குண்டது இந்தியாவின் பொருளாதாரம்.  “தி எக்கனாமிஸ்ட்” இன் தற்போதைய மதிப்பீட்டின்படி, உண்மையான இறப்பு எண்ணிக்கை என்பது 2021, ஜூன் மாத இறுதிக்குள் சுமார் 40 லட்சம் என்றால் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.  

இந்த வாரம் அபிஷேக் ஆனந்த் மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஒரு ஆய்வுக் குழுவான குளோபல் டெவலப்மெண்ட் மையத்தின் (Global Development Centre) களப்பணியாளர்களால் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட பணக்கார நாடுகளை விட இந்தியாவில் இதன் தாக்கம் மிகக் கொடியதாக இருக்கிறது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொடூரமாகத் தாக்கும் வரை மற்ற நாடுகளில் இறப்பு விகிதமானது இந்தியாவின் இறப்பு விகிதங்களைப் போலவே இருந்தது. ஆனால், இரண்டாம் அலைக்குப் பின்னரான தரவுகள் நிலைமையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லப் போராடுவதில் ஆச்சரியமில்லை.

இந்தியாவின் பொருளாதாரம் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. பணக்கார நாடுகள் நிலைமையை சமாளித்து முன்னேறும் போது இந்தியா மட்டும் கடுமையான வேலையிழப்பு, உயரும் பணவீக்கம் (inflation), அதிகரிக்கும் தேவைகள், அதல பாதாளத்தில் வீழ்ந்த சேமிப்புகளும், முதலீடுகளும் என்று மிக மோசமாக பாதிப்படைந்திருக்கிறது. இவற்றில் பல கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னதாகவே இருந்தாலும், இரண்டாம் அலைக்குப் பிறகு மிக மோசமடைந்திருக்கிறது. நெரிசலான நகரத்தில் சிக்கிக் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ்சை போல இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் நகர மறுக்கிறது. பொருளாதாரமும், இந்தியர்களின் உடல் நலமும் மீண்டெழுவதற்கு நீண்டகாலம் எடுக்கும். வலி நிறைந்த நாட்களாக இனி வரும் நாட்கள் இருக்கும்.

மும்பையில் வசிக்கும் நீரஜ் வோரா, ஒரு வீட்டு உபயோகப் பொருட்களை விற்கும் விற்பனைப் பிரதிநிதி (salesman). கடந்த முழு அடைப்பின் போது அவரது சம்பளம் ₹36,000யில் இருந்து ₹14,000ஆக சரிந்தது. அவரின் தந்தை கோவிட் தோற்றால் நோயுற்றபோது, அவர்களால் மருத்துவச் செலவை சமாளிக்க முடியவில்லை. தங்கள் சேமிப்புகளையும், வைப்பு நிதியையும் (fixed deposit) அவர்கள் செலவழிக்க வேண்டியிருந்தது. தன்னுடைய சில வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றவரான வோரா, அவர்களிடம் இருந்து உதவிகளைப் பெற்றார். ₹2,80,000 மருத்துவமனைக் கட்டணத்தை அவரால் அப்படித்தான் கட்ட முடிந்தது. அவரது குடும்பம் இப்போது நலமாக இருக்கிறது. ஆனாலும், அவரது தந்தையாரின் மருத்துவச் செலவு மட்டும் மாதத்துக்கு ₹3,000 முதல் ₹4,000யை  விழுங்கி விடுகிறது. மீதமிருக்கும் ₹10,000யில் ₹5,000 வீட்டு வாடகை கட்டிவிட்டுக் கடன்களை அடைக்க வேண்டிய ஒரு சிக்கலான சூழலில் இருக்கிறார் வோரா.

“எப்போது சம்பளம் வங்கிக் கணக்குக்கு வருகிறது, எப்போது காணாமல் போகிறதென்று எனக்கே தெரியவில்லை” என்கிறார் வோரா. இப்போது வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவதை அவர் மறப்பதில்லை, கையுறை (gloves) அணிந்து கொள்கிறார், கைகளை சேணிட்டைஸ் செய்வதை அதிகப்படுத்தி இருக்கிறார். இன்னொருமுறை இத்தகைய ஒரு சூழலை எதிர்கொள்ளும் அளவுக்கு எனது குடும்பத்துக்கு வலுவில்லை என்கிறார் அவர்.

மார்ச் 31 இல் முடிந்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.3 % ஆக சுருங்கி இருக்கிறது. ஆசியாவின் பெரிய பொருளாதார நாடுகளில் இதுதான் மிக மோசமான வீழ்ச்சி. இது இரண்டாம் அலை தீவிரமாகத் துவங்கியதற்கு முன்பான நிலை. 2020 மத்திய பகுதி வரையில் இந்தியாவின் பொருளாதாரம் இவ்வளவு மோசமாக இருக்கவில்லை. திடீரென்று நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் இந்த நிலை மிக மோசமடைந்தது. பல லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள் வேலையை இழந்தார்கள். நெடுஞ்சாலைகளில் நடக்கத் துவங்கினார்கள். இந்திய நடுத்தர வர்க்கத்தினர் இரண்டாவது அலையின் போது மோசமான பொருளாதார விளைவுகளை சந்தித்தனர்.

நீரஜ் வோராவைப் போலவே கோடிக்கணக்கானவர்கள் வருமானத்தைப் பாதியாக இழந்தார்கள். ஓரளவு சமாளிக்கும் திறனுள்ளவர்கள் கூட தங்கள் சேமிப்பையும், முதலீடுகளையும் இழந்தார்கள். கடந்த நிதியாண்டில் மட்டும் தங்கத்தை அடகு வைத்து பணம் வாங்கும் இந்தியாவின் பழங்கால கடன் முறையானது 82% அளவில் உயர்ந்தது. Grand Thornton நிறுவனத்தின் சர்வே ஒன்றின் படி, ஏறத்தாழ வேலையில் இருந்த 40% பேர் தங்கள் சம்பளம் கடந்த ஆண்டில் குறைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். இன்னொரு 3,000 பேரிடம் எடுக்கப்பட்ட சர்வேயில், டெல்லியின் பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள், குறிப்பாக குடும்பத் தலைவர்களான ஆண்களில் 39% பேர் தங்கள் வருமானத்தை இழந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். 38,000 பேர் கலந்து கொண்ட ஆன்லைன் சர்வே ஒன்றில், இன்டர்நெட் பயன்படுத்துவதை பொழுதுபோக்காகக் கொண்ட இந்த ஆண்டில் தங்கள் வருமானம் வீழ்ச்சி அடையும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

உணவுக்காகக் கையேந்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக பொதுசேவை நிறுவனங்கள் (charities) கூறுகின்றன. தனியார் பள்ளிகள் கூட கட்டணங்களைக் குறைந்திருக்கின்றன. ஆனாலும், 120 மில்லியன் குழந்தைகளின் கல்வியை ஆதாரமாகக் கொண்ட பள்ளிகள் இப்போது சேர்க்கைகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இல்லாதது, மற்றும் கட்டணங்கள் குறைப்பு காரணமாக இந்த வீழ்ச்சி நிகழ்ந்திருக்கிறது. 

பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க உறுதியான வளர்ச்சி இருக்கும் என்று கணித்துள்ளனர். இது கடந்த ஆண்டு நிகழ்ந்த பொருளாதார துயரத்தை ஈடு செய்யப் போதுமானது. ஆனால் கேள்வி இப்போது “சாதாரண” வளர்ச்சி எவ்வளவு வேகமாக மீண்டும் தொடங்கும் என்பது அல்ல, எத்தனை ஆண்டுகளை நாம் இழந்திருக்கிறோம்? “சாதாரண” 2000 களில் இந்தியா சாதித்த 7-8% அளவிலாவது  வளர்ச்சி இருக்குமா?, அல்லது முந்தைய பத்தாண்டுகளில் 3-5% என்ற அளவில் இருக்கிறது. தில்லியில் உள்ள ஒரு சமூக ஆய்வுக் குழுவான தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழுவின் (NCAER-National Council of Applied Economic Research) சமீபத்திய ஆய்வு, ஒரு விரைவான வளர்ச்சித் திட்டம் இல்லாமல் இந்தியா இழந்த வளர்ச்சியை ஒரு போதும் ஈடுசெய்யமுடியாது என்றும் பெரிய தொழிலாளர்கள் மக்கள்தொகையின் உழைப்பின் வருமானத்தை ஒருபோதும் அறுவடை செய்யமுடியாது என்றும் கூறுகிறது.

இந்தப் பொருளாதார அழுத்தத்தை இந்திய அரசு நன்றாக அறிந்திருக்கிறது. ஜூன் இறுதியில் அது ஊக்க நடவடிக்கைகளில் மேலும் $85 பில்லியன் உள்ளீடு செய்யப்படும் என்றும் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3% என்று அறிவித்தது/ கடந்த ஆண்டு உறுதியளிக்கப்பட்ட பெயரளவிலான $300 பில்லியன் நிவாரண தொகுப்பைத் தொடர்ந்து. இது பல குடும்பங்களை சென்று சேரவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. வங்கிகளை காப்பாற்றவும், சிறு வணிகங்களுக்கு, குறிப்பாக சுற்றுலா போன்ற கடுமையான துறைகளில் இந்த நிவாரநாத் தொகுப்பு உதவியது. இலவச உணவு தானியங்களின் விநியோகத்தை மேலும் ஐந்து மாதங்களுக்கு நீட்டித்துள்ளது இந்திய அரசு. இருப்பினும் அரசின் செலவினக் கணக்குகள் விரிவடைந்து வருவதாக தரவுகள் இல்லை; சுருங்கி வருவதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஜூன் மாதக் காலாண்டில், ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில், புதிய திட்டங்களில் மாநில முதலீடு 42% சரிந்தது. NCAERயின்  கூற்றுப்படி, இந்த ஆண்டு மொத்த செலவினம் (expenditure) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 16.3% ஆக இருக்கும். இது முந்தைய ஆண்டின் 17.8% இல் இருந்து மேலும் வீழ்ச்சி ஆகும்.

இந்த புள்ளி விவரமானது இந்தியா ஒரு ஏழை நாடாக உள்ளது என்ற உண்மையை பிரதிபலிக்கிறது. அரசு அதன் கடன் மதிப்பீடு, வட்டி விகிதங்கள் (interest rates) மற்றும் பணவீக்கம் (inflation) மீது எச்சரிக்கையுடன் கவனம் வைத்திருக்கிறது. இது மத்திய வங்கியின் தோராயமான உச்ச வரம்பான 6% ஐ விட அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவின் கோவிட்-க்குப் பிந்தைய பல பிரச்சனைகளுக்கு காரணம். அதன் தலைவர்களின் மோசமான தேர்வுகள் காரணமாகவே நிகழ்ந்திருக்கிறது. மனிதர்களின் உடல் நலம் குறித்து, மனித வளத்தில் முதலீடு செய்யத் தவறியதில் இருந்து, இந்தியா ஒரு சவால் மிகுந்த பொருளாதாரமாக வளரும். சூழலைக் கடந்து இப்போது நிகழ்ந்த பின்னடைவு தான் பிரச்சனைகளுக்கு முழுமுதற்காரணம். 

இந்த வாரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Medical Council) வெளியிட்ட 21 இந்திய மாநிலங்களில் உள்ள 70 மாவட்டங்களில் வாழும் 36,000 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள் கோவிட்-19 எதிர்ப்பு ஆற்றலைக் கொண்டிருந்தனர். இதில் தடுப்பூசி போடப்படாதவர்களின் எண்ணிக்கையான 62% பேரும் அடங்குவர். அதிகப்படியான இறப்பு எண்ணிக்கையைப் போலவே, இது இரண்டாவது அலைக்குப் பிறகு வெறும் 31 மில்லியன் அதிகாரப்பூர்வ நோய்த்தொற்று  எண்ணிக்கையின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படுவதை விட அதிகமாக உள்ளது. ஆனால் அது இன்னும் கிட்டத்தட்ட அரை பில்லியன் மக்களை எந்த எதிர்ப்பு ஆற்றலும் இல்லாமல் விட்டு விடுகிறது.

பொருளாதார விமர்சகர் விவேக் கவுல் இந்திய பொருளாதாரத்தின் போக்கை, வடிவமைப்பை கீழ்க்கண்டவாறு கூறுகிறார், “நீங்கள் ஒரு வீட்டை மிகவும் பலவீனமாகக் கட்டி இருக்கிறீர்கள், புயல் தாக்குகிறது, கூரையில் ஓட்டை விழுந்து வீடு ஒழுகினால், புயலை மட்டும்தான் நீங்கள் குறை சொல்வீர்களா?” துரதிர்ஷ்டவசமாக இன்னும் பல புயல்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

Credits: The Economist

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...