2020 முதல் ₹10,000 கோடி இழப்பு, ஆனால் இண்டிகோ இன்னும் உயரமாக பறப்பது எப்படி?

Date:

விமான நிறுவனம் ஒரு முக்கியமான, ஆனால் சவாலான தொழில். பலர் இந்த தொழிலில்  நுழைந்தனர். ஆனால் வெகு சிலரால் மட்டுமே  வெற்றிகரமாக இருக்க முடிந்தது. கடந்த காலங்களில், கிங்ஃபிஷர், ஜெட் மற்றும் ஏர் டெக்கான் போன்றவை திவாலானதை நாம் பார்த்திருக்கிறோம்.

இயங்குபவர்களில் கூட , ஒரு நிறுவனம்  எரிபொருளை விட அதிக அளவில் பொதுப் பணத்தை எரிக்கிறது. மற்றொன்று அதன் எரிபொருள் செலவை சமாளிக்க ஒரு ஆரம்ப பொது சலுகையை (initial public offering) தாக்கல் செய்தது. இன்னொன்று, இயக்கத்தில் இருந்தாலும், பல பகுதிகளில் சந்தைப் பங்கை (market share) வேகமாக இழந்து வருகிறது. மீதமுள்ளவர்கள் தங்கள் விளம்பரதாரர்களிடமிருந்தும் (promoters) கடன் வழங்குபவர்களிடமிருந்தும் பெரும் தொகையை திரட்டி நெருக்கடியில் உள்ளனர்.

ஏற்கனவே மூச்சுத்  திணறிக்கொண்டிருந்த விமான தொழில், தொடரும் கோவிட் -19 தொற்று நோயால் இன்னும் சங்கடத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் காயமடைந்திருந்தாலும், எழுந்து நிற்க தன்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறது என்றால் அது இண்டிகோ (IndiGo) தான். 

குறைந்த விலை விமான சேவை நிறுவனமான  இண்டிகோ இன்டர்கிளோப் ஏவியேஷனால் (Interglobe Aviation) இயங்கப்படுகிறது. ஜூனில் முடிந்த  காலாண்டில் தினசரி ₹35 கோடி வீதம் இழப்பை சந்தித்தது. இந்த இழப்பு கடந்த ஆறு காலாண்டுகளில் ₹10,000 கோடியை நெருங்கியது.

தொற்று நோயின் இரண்டாவது அலை காரணமாக அதன் வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் நிகர கடன் (net debt) ₹31,690 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 22.5 சதவீதம் அதிகமாகும். இது குத்தகைக்கு (lease) எடுத்த விமானங்களின்  மீதான செலவையும் உள்ளடக்கியது.

நிறுவனம் எப்போது சீராகும் என்பதில் தெளிவு இல்லை. பெரும்பாலான ஆய்வாளர்கள், 2022 ஆம் ஆண்டின் முழு நிதியாண்டிலும் தொடர்ந்து இண்டிகோ நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று நம்புகின்றனர். பயணிகள் பயணம் செய்ய இன்னும் தயங்குவது, தொற்றுநோயின் மூன்றாவது அலை நெருங்கிவிட்டது போன்ற காரணங்களினால் இந்த நிலை நீடிக்கிறது

இருப்பினும், இவை அனைத்திற்கும் மத்தியில், இண்டிகோவை மற்ற ஏர்லைன்ஸ் இடமிருந்து வேறுபடுத்துவது அதனிடம் உள்ள சொத்துக்கள். நிறுவனத்திடம் ₹7,067.9 கோடி உள்ளது. நிகர பண அளவு (net cash level) ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 7 சதவிகிதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. ஆனால் அது ஒன்றும் மிகப்பெரிய கவலை இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் நிறுவனம் அதன் இருப்புநிலைகளை மேலும் வலுப்படுத்தும் QIP (Qualified institutional placement-மூலதனம் திரட்டுவதற்கு) உடன் வரவிருக்கிறது.

சில ஆய்வாளர்கள் இண்டிகோ வெற்றி பெற்று நெருக்கடியிலிருந்து வெளியே வரத் தகுதியான நிலையில் இருப்பதாக கருதுகிறார்கள். இண்டிகோ ஏற்கனவே போட்டியாளர்களிடமிருந்து சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது. இப்போது நாட்டின் மொத்த சந்தையில் பாதிக்கும் மேலாக வைத்திருக்கிறது.

விமானப் பயண வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இண்டிகோ வாடிக்கையாளர் மற்றும் செலவு முனைகளில் முன்னணி நிறுவனமாக  இருக்க அதற்கு சக்தி இருக்கிறது என்று மோர்கன் ஸ்டான்லியின் (Morgan Stanley) ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கோடக் நிறுவன பங்குகளின்  (Kotak Institutional Equities) ஆதித்யா மோங்கியா, நிறுவனத்தின் மீது சுமத்தப்படும் குறைந்த அளவிலான வாடிக்கையாளர் புகார்கள், எரிபொருள் திறன் கொண்ட விமானங்கள் , குத்தகைதாரர்களுடனான நல்லுறவு  ஆகியவை இண்டிகோவை “FY23 இலிருந்து கோவிட் நெருக்கடியிலிருந்து வலுவாக வெளிவர” உதவும் சில காரணிகளாகும் என்று கருதுகிறார்.

“குறுகிய காலத்தில், இண்டிகோ அதிகரிக்கும்  செலவுகளை ஈடுகட்டும் போது , பறக்கும் திறனை அதிகரிக்க வேண்டும். இத்தகைய எண்ணிக்கையில் திட்டமிடல் வாராந்திர அடிப்படையில் நடக்கிறது. இது ஒரு நிலையற்ற இயக்க சூழலைக் குறிக்கிறது, ”என்று அவர் மேலும் கூறினார். ₹2,250 இலக்குடன் இண்டிகோவின் ஒரு பங்கை மதிப்பிட்டார். வியாழக்கிழமை, பங்கு பங்குச்சந்தையில் இண்டிகோ ₹1,653.25 இல் முடிந்தது.

ஆய்வாளர்கள் கூறுகையில், இண்டிகோ பங்குகளின் விலை கடந்த நிதியாண்டின் போது கூர்மையான மீட்பைஅடைந்திருக்கிறது. தொற்று நோயின் இரண்டாவது அலையின் போது இண்டிகோவின் பங்குகள் ஒரே மாதிரியாக இருந்தன, அதன் போட்டியாளர்களைப் போலல்லாமல் – எந்த ஏற்ற இறக்கமும் இல்லை.

எவ்வாறாயினும், ஒவ்வொரு ஆய்வாளரும் இந்த விலை நிலையாகத்  தொடரும் என்று எதிர்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் அடுத்த 12 மாத காலங்களில், இண்டிகோவின் வருவாயைக் குறைக்கும் பல அபாயங்கள் காத்திருக்கிறது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். மேலும், பயணங்கள் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது. உதாரணத்திற்கு, மோதிலால் ஓஸ்வாலைச் (Motilal Oswal) சேர்ந்த ஸ்வர்ணேந்து பூஷண், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது  இந்தக் காலாண்டில் 19 கோடியிலிருந்து ஒரு நாளில்   35 கோடியாக இண்டிகோவுக்கு செலவுகள் அதிகரித்ததை சுட்டிக்காட்டினார்.

பலர் இண்டிகோவில் உள்ள தங்களின் பங்குகளை ‘குறைக்கவும்’ மற்றும் ‘விற்கவும்’ தயாராகவுள்ளனர். முதலீடு செய்வதற்கான சிறந்த தேர்வாக இண்டிகோ தற்சமயம் இல்லை. முதல் காலாண்டில்  உள்ள அதே விகிதத்தில் நிறுவனம் தொடர்ந்து தனது பணத்தைத் தொடர்ந்தால் , பங்குச் சந்தை வர்த்தகர்கள் அதை மற்ற ஏர்லைன்ஸ்சை போல நடத்த அதிக நேரம் ஆகாது.

Credits: ET

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...