உலகளவில் தனித்துவமான இலகு ரக,அதிவேகமாக சீறிப்பாயும்,மலிவு விலை கார்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற
நிறுவனம் ஃபோர்ட். கடும் நிதி நெருக்கடி, பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் குத்தி கிழிக்கப்பட்டுள்ள ஃபோர்ட் நிறுவனம் பல்வேறு நாடுகளிலும் இருந்து தங்கள் வணிகத்தை முடித்துக்கொண்டு நடையை கட்டி வருகிறது
இந்த வரிசையில் ரஷ்யாவில் இருந்து ஃபோர்ட் நிறுவனம் வெளியேறுவதாக அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
ரஷ்யாவில் உள்ள சோலர்ஸ் ஃபோர்ட் என்ற கூட்டு நிறுவனத்தில் ஃபோர்ட் நிறுவன பங்குகளான 49 விழுக்காடு பங்குகளை
விற்க சம்மதம் தெரிவித்துள்ளது
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள ஃபோர்ட் நிறுவனம் தனது பங்குகளை 5 ஆண்டுகளுக்கு கூட்டு நிறுவன நாமினல் வேல்யூவுக்கு மாற்றுவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் நிலவும் வர்த்தக நிலையற்ற சூழலால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஃபோர்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது கடந்த மார்ச் மாதமே ரஷ்யாவில் உள்ள தனது ஆலை செயல்பாடுகளை நிறுத்தியுள்ள ஃபோர்ட் நிறுவனம், தற்போது முழுமையாக அங்கிருந்து வெளியேறுவது ரஷ்யாவில் உள்ள ஃபோர்ட் நிறுவன கார் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வடக்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளனர். இதனால் உலகில் பிரபல நிறுவனங்களான சிஸ்கோ,நைக்கி,உள்ளிட்ட நிறுவனங்கள் படிப்படியாக ரஷ்யாவை விட்டு வெளியேறி உள்ளன. இந்த வரிசையில் தற்போது ஃபோர்ட் நிறுவனமும் கைகோர்த்துள்ளது.