அரசுத்துறைக்கு உதவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனங்கள் இலக்கை எட்டுகிறதா இல்லையா என்று மத்திய அரசு கண்காணித்து வருகிறது. அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் இவர்கள் இலக்கை எட்டவில்லை என்றால் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகட்டுமானங்கள் முடிக்கப்படாவிட்டால் அவர்களுக்கு அளிக்கப்படும் வங்கி உத்தரவாதம் நீக்கப்படும் என்றும் மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் எச்சரித்துள்ளது. தற்போது வரை எந்த நிறுவனத்தையும் பிளாக் லிஸ்ட் செய்யாமல் உள்ள மத்திய அரசு,விரைவில் அதை செய்ய உள்ளதாக எச்சரித்துள்ளது. 2022-ல் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதாவது 40ஜிகாவாட்ஸ் அளவுள்ள சோலார் உள்ளிட்ட கட்டமைப்புகளை செய்யவேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தவறும் ஒப்பந்ததாரர்களுக்கு அடுத்த 3முதல் 5 ஆண்டுகளுக்கு எந்த பணிகளும் அளிக்கப்படாது. 2022-க்குள் 175 ஜிகாவாட் மின்சார உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் வெறும் 122ஜிகாவாட் அளவுக்கு மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் நீர்ம மின்சாரம் 46 ஜிகாவாட் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனல் மின்சாரம் என மொத்த இலக்கு 411 ஜிகாவாட் திட்டமிட்டது. நிலக்கரி மற்றும் கேஸ் மூலம் மின்உற்பத்தி 236 ஜிகாவாட் இலக்கு நி்ர்ணயிக்கப்பட்டுள்ளது.
எந்தெல்லாம் தேறாது என்று கணக்கெடுப்பு!!!
Date: