உலகளவில் சொகுசு கார்களின் பட்டியிலில் எப்போதும் இருக்கும் கார்களில் ஒன்றாக போர்ஷே கார்கள் உள்ளன, இந்த சூழலில் அந்த கார் நிறுவனம் புதிதாக பனமேரா என்ற வகை புதிய ஸ்போர்ட்ஸ் காரை சந்தைபடுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள AGடீலர் ஒருவர், 1 லட்சத்து 48ஆயிரம் டாலர் மதிப்புள்ள புதிய சொகுசுகாரை 8-ல் ஒரு பங்கு விலைக்கு விற்பதாக விளம்பரம் செய்தார். 18 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு இத்தனை பெரிய சொகுசு கார் கிடைக்கிறது என்று டீலரே பதிவிட்ட சூழலில் ஏராளமானோர் ஆர்டர் செய்தனர். திடீரென இத்தனை பெரிய ஆர்டர்கள் குவிவதற்கான காரணம் குறித்து போர்ஷே நிறுவனம் ஆராய்ந்தபோது தவறுதலாக விலை குறைந்து ஆர்டர்கள் பெறப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆர்டர் எடுத்த வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட போர்ஷே நிறுவனம், பெற்ற பணத்தை திரும்ப அளித்துவிட்டது.2022ம் ஆண்டில் மட்டும் சீனாவில் போர்ஷே கார்களின் விற்பனை 6.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக விற்பனை நடந்தது.சீனாவில் மட்டும் 46,664 கார்களை அந்நிறுவனம் விற்றுத்தள்ளியுள்ளது. இந்த எண்ணிக்கை உலக சந்தையில் 30 சதவீதமாகும்.
ஒரு நம்பர் விட்டுபோனதால் வந்த வினை!!!
Date: