அதானி குழும பங்குகள் மோசடியாகவும்,முறைகேடாகவும் பங்குச்சந்தைகளில் செயல்பட்டதாக ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம் குற்றம்சாட்டியது. இதனால் அதானி குழும சொத்துகள்,பங்குச்சந்தை மதிப்புகள் என எல்லாமே காணாமல் போயின, இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அதானி குழும பங்குகள் 30% உயர்ந்துள்ளன. பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளதால் அதானி குழும சந்தை முதலீடுகளும் ஏழரை லட்சம் கோடியில் இருந்து 39ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. Adani Enterprises நிறுவனத்தின் பங்குகள் மட்டும் ஒரே நாளில் 15.78% உயர்ந்து 1,579 ரூபாயாக ஏற்றம் பெற்றுள்ளது. அதானி போர்ட் நிறுவன பங்குகள் 2.64% உயர்ந்து 608 ரூபாய்25 காசுகளாக உள்ளது. அம்புஜா சிமெண்ட்ஸ் 2.27% ஏசிசி சிமென்ட்ஸ் 1.33% உயர்ந்து 1755 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதானி குழும பங்குகள் திடீரென உயர காரணம் என்ன என்று பலரும் எதிர்பார்த்திருக்கின்றனர். அதற்கான விடை 800 மில்லியன் டாலர் கடனை பெற்றுள்ள அந்த நிறுவனம், தனது நிறுவன முதலீடுகளில் அதனை செலுத்த இருக்கிறது. ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இருந்து மேலும் பல முதலீட்டாளர்கள் அதானிக்கு வலு சேர்க்க இருப்பதாக நம்பிக்கை எழுந்துள்ளதால் முதலீட்டாளர்கள் பக்கம் அதானி குழும பங்குகள் சென்றுள்ளன.
விழுந்த வேகத்தில் எழுந்த அதானி குழும பங்குகள்!!!
Date: