விமான எரிபொருள் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால் விமான பயணக் கட்டணம் உயரும் என அஞ்சப்படுகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசலுக்கான விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதேபோல், விமானங்களை இயக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஜெட் எரிபொருளின் விலையும் 15 நாட்களுக்கு ஒருமுறை என மாதத்தில் 1 மற்றும் 16-ம் தேதிகளில் ஜெட் எரிபொருளின் விலையும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இதுவரை இல்லாத அளவாக ஜெட் எரிபொருளின் விலையானது 18% அதிகரிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் ஜெட் எரிபொருள் ரூ.1,10,666.29-ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த முறையை விட 17 ஆயிரத்து 135.63 ரூபாய் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை ஜெட் எரிபொருளின் விலை ரூ.1,14,133.73-க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்கள், விமானங்களை இயக்குவதன் மூலம் பெறப்படும் தொகையில் 40 சதவீதத்தை விமான எரிபொருளுக்காக செலவிட்டு வருகின்றன. இந்நிலையில், ஜெட் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், விமான பயணக் கட்டணம் உயரும் என்று அஞ்சப்படுகிறது.