ஆள் பாதி,ஆடை பாதி என்பார்கள்,இது பிற துறைகளில் சற்று முன்னும் பின்னும் பயன்படுத்தி வந்தாலும்,விமானத்துறையில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அண்மையில் மத்திய அரசிடம் இருந்து வாங்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்துறையை மெருகேற்றும் பணியில் டாடா இறங்கியுள்ளது. தற்போது அந்த விமானத்துறையில் பணியாற்றும் ஆடவர் மற்றும் மகளிருக்கு புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆண்கள் இப்படித்தான் சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என்று வரையறுத்துள்ள டாடா குழுமம், பெண் பணியாளர்கள் முத்து காதணிகளை பயன்படுத்த கூடாது என தெரிவித்துள்ளது, பணி நேரத்தில் தங்கம் அல்லது வைர காதணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது 0.5 செண்டமீட்டருக்கு மேல் பொட்டு வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,எந்தவித டிசைனும் இல்லாமல் ஒரே ஒரு வளையல் மட்டும் அணிந்தால் போதும் என்றும், பெண்கள் கொண்டை போடுவதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஐஷேடோ,லிப்ஸ்டிக்,நெயில் பெயிண்ட் ஆகியவற்றில் குறிப்பிட்ட அளவு,நிறம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், 4 கொண்டை ஊசிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. வெள்ளை முடி இருந்தால் அதை இயற்கையான நிறமிகள் கொண்டு வண்ணம் பூசிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிங்பிஷர் விமான நிறுவனம் தொடங்கப்பட்ட பொழுது பணியில் இருக்கும் விமான சிப்பந்திகள் எவ்வாறு உடை அணிய வேண்டும், எவ்வாறு பேச வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அது பயணிகள் மத்தியிலும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது…