ஆண்டு முழுதும் மக்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சவலான துறை உண்டு என்றால் அது நிதித்துறையாக மட்டுமே இருக்கும். இந்த துறையில் மணிமகுடமென்றால் அது பட்ஜெட் மட்டுமே. மத்திய நிதியமைச்சர் அம்மையார் நிர்மலா சீதாராமன் அண்மையில் அனைத்துத்துறை நிபுணர்கள், வணிகர்கள் அமைப்புகளுடன் சேர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு முடித்துள்ளார். இந்த சூழலில் இந்திய பட்ஜெட்டை தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் பட்ஜெட்டில் என்ன அம்சங்கள் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் கசிந்துள்ளது. முதலீட்டாளர்கள்,மற்றும் வரி செலுத்துவோர் வரும் பட்ஜெட்டில் வரி சலுகைகளை எதிர் நோக்கியுள்ளனர். குறிப்பாக காப்பீட்டு துறை சார்ந்த வரிகளை மேலும் குறைக்க வேண்டும் என்றும், குறிப்பாக மருத்துவ காப்பீடு என்பது அனைத்து துறைகளுக்கும் பொதுவான அவசிய தேவை என்பதால் அது குறித்து வரிவிலக்குகள் எதிர்பார்க்கப்படுகின்றன. 80 சி பிரிவில் வரிகளை உயர்த்துவதால் மக்கள் கூடுதல் வரி செலுத்தவேண்டி இருக்கும் என்றும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த ஆவணங்களுக்கு வட்டிஉயர்த்தப்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது இது பற்றியும் நிதியமைச்சகம் சார்பில் ஆலோசித்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பென்ஷன் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை மேலும் அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசனையில் நிதியமைச்சர் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வீடு வாங்க நினைப்போர், மாத சம்பளம் வாங்குவோர் என பலதரப்பினரும் வருமான வரி உச்சவரம்பு மாறுமா என்றே ஆவலுடன் உள்ளனர். இந்த கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கப்படுமா இல்லை வழக்கம்போல ஏமாற்றம்தான் மி்ஞ்சுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல இருக்கிறது.
இதெல்லாம் பட்ஜெட்ல இருந்தா நல்லா இருக்கும்!!!
Date: