அமேசான் நிறுவனத்துக்கு தொழிற்சங்கப்பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகளை (General Data Protection Regulation, or GDPR) மீறி தனிநபர்களின் பர்சனல் டேட்டாவை செயலாக்கியதற்காக ஐரோப்பிய யூனியனால் $886.6 மில்லியன் (சுமார் ₹6,500 கோடி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லக்சம்பர்க் தரவுப் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (Luxembourg National Commission for Data Protection aka CNPD) அமேசானுக்கு ஜூலை 16 -ஆம் தேதி அளித்த தீர்ப்பில் இந்த அபராதத்தை விதித்தது, இந்த செய்தியை அமேசான் வெள்ளிக்கிழமை ஒரு ஒழுங்குமுறை ஆவணத்தைத் தாக்கல் (regulatory filing) செய்தபோது வெளிப்படுத்தியது.
அமேசான், அபராதத்தை மேல்முறையீடு செய்யும் என்று கூறப்படுகிறது. CNPD யின் முடிவு சரியல்ல என்று அந்த ஈ-காமர்ஸ் நிறுவனம் நம்புகிறது. CNPD இதற்கு பதிலளிக்கவில்லை.
ஐரோப்பிய யூனியனின் பொதுத் தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை அல்லது GDPR ரின் படி , நிறுவனங்கள் தங்கள் தனிப்பட்ட டேட்டாவை பயன்படுத்துவதற்கு முன்பு மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் அல்லது கடுமையான அபராதங்களை எதிர்கொள்ள வேண்டும்.
தனியுரிமை மற்றும் தவறான தகவல்களின் தொடர்ச்சியான ஊழல்கள் மற்றும் சில வணிகங்களின் புகார்களைத் தொடர்ந்து தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒழுங்குமுறை ஆய்வு அதிகரித்து வருகிறது. கூகிள், ஃபேஸ்புக், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை ஐரோப்பாவில் அதிக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பரில், ஆன்லைன் விளம்பர டிராக்கர்கள் மீது நாட்டின் விதிகளை மீறியதற்காக பிரான்ஸ் அபராதமாக 100 மில்லியன் யூரோக்களை Google க்கு விதித்தது.
வாடிக்கையாளர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதால் அடுத்த சில காலாண்டுகளில் விற்பனை வளர்ச்சி குறையும் என அமேசான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. மக்கள் அமேசான் பிரைமிற்காக (Amazon Prime Video) குறைவாக செலவிடுகிறார்கள் என்று மேலும் அமேசான் கூறுகிறது.
கோவிட் -19 தொற்றுநோய்க்கு ஒரு வருடத்திற்கும் மேலாக, அமேசானின் நிதிவளம் சிறிது மங்கியே காணப்படுகிறது. . இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வருவாய் 44 சதவிகிதம் அதிகரித்திருந்தாலும், ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலத்திற்கு அந்த எண்ணிக்கை 27 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மூன்றாவது காலாண்டில் விற்பனை 16 சதவிகிதம் மட்டுமே உயரக்கூடும் என்று அமேசான் தெரிவித்துள்ளது.
மூலம்: ரொய்ட்டர்ஸ்