தனது டெலிவரி சேவைகளை அதிகரிக்க அமேசான் இந்தியா நிறுவனம், இந்திய ரயில்வேயுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் பேக்கேஜ்களை கொண்டு செல்ல முடியும் என்று அமேசான் இந்தியா கூறியது,
வாடிக்கையாளர்களின் பேக்கேஜ்களை நாகர்கோவில், ரத்னகிரி, கர்னூல், பரேலி, பொகாரோ ருத்ராபூர் உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்புகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் 1 அல்லது 2 நாட்களில் பேக்கேஜ்களைப் பெறலாம்.
அத்துடன் அமேசான் இந்தியாவின் துணை நிறுவனமான அமேசான் டேட்டா சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மும்பையின் புறநகர் பகுதியான போவாய் பகுதியில் உள்ள லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 5.5 ஏக்கர் தொழில்துறை நிலத்தை டேட்டா சென்டர் அமைப்பதற்காக நேற்று குத்தகைக்கு எடுத்தது.
சுமார் 21 ஆண்டு குத்தகைக் காலத்திற்கு, அவ்வப்போது வாடகை அதிகரிப்புடன், சுமார் ₹3.57 கோடி மாத வாடகையை அமேசான் செலுத்தும். குத்தகை ஒப்பந்தத்தில் 24 மாதங்கள் வாடகை இல்லாத காலம் உள்ளது.